விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

நியூயார்க்: நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்று நாளை காலை 10.30 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply