பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.
நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. இதனால் கொரோனா பாதிப்பில் உலகநாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.,

கடந்த 24 மணிநேரத்தில் 956 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 28,834 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கையில் உலக நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் சாவ் பாலோவில் கொரோனாவால் பலியானவர்களில் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் சவக் குழிகளை தோண்டி வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் 2,05,371 பேர் குணமடைந்துள்ளனர். 2,59,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply