பாக். அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என இம்ரான் அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.08 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2,170 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், ‘நாட்டில், கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை, அரசு, சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கை மற்றம் சட்டம் பற்றி தெரிவிக்க வேண்டும் ‘ என, பிரதமர், இம்ரான் கான் தலமையிலான அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Leave a Reply