பாகிஸ்தானில் புத்த சின்னங்கள் சேதம்-இந்தியா கண்டனம்

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில், புத்த நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித் – பல்திஸ்தான் பகுதியில் உள்ள பழமையான புத்த நினைவு சின்னங்களாக இருந்த பாறை சிற்பங்களில், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய கொடியை வரைந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வல்லுநர் குழுவை அனுப்பி, புத்த நினைவு சின்னங்களை இந்தியா சீரமைக்க உள்ளது.

பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்ஜித் – பல்திஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Spread the love

Leave a Reply