தவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்

வாஷிங்டன் : அமெரிக்காவின் மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை அடுத்து அமெரிக்காவில் கலவரம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பிலடெல்பியாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜார்ஜ் கொலை குறித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘நாம் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அதீத வலியில் உள்ளோம். இந்த நிலையில் தற்போது மேலும் அதிக வலி நமக்கு வேண்டாம்’ நடந்து முடிந்த பிரச்னை குறித்து விரிவான அலச வேண்டும் டிரம்பின் நிர்வாகத் திறமை இன்மை மற்றும் கவனக் குறைவால்தால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் மரணம் அடைந்துள்ளனர். டிரம்ப் என்றுமே அவருடைய தவறுகளுக்கு பொறுப்பேற்க மாட்டார். நான் அப்படிக் கிடையாது. என் செயல்களுக்கும் தவறுகளுக்கும் என்றுமே பொறுப்பேற்கும் குணம் கொண்டவன் நான்’ என்றார்.

மினியாபாலிஸ் போராட்டம் குறித்து கட்டுரை எழுத முற்பட்ட பத்திரிகையாளர்கள் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். புலிட்சர் பரிசு வென்ற கிரிஸ்டின் கிரஹாம் உட்பட பல மூத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிடன் கூறுகையில், டிரம்ப் அரசு வன்முறை போராட்டங்களை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க, பிளாஷ் கிரனேட், ரப்பர் புல்லட்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் நிலமை மோசம் அடைந்தால் ராணுவத்தை அழைக்கப்போவதாக டிரம்ப் கூறி வருகிறார். இது ஆபத்தானது என தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply