கொரோனாவை மறந்து அமெரிக்க செல்வந்தவர்களுக்கான ஆடம்பரத் தீவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ளே ஒரே தனியார் சொகுசுத் தீவு புளோரிடா மாகாணத்தின் அருகே உள்ள லிட்டில் பாம் தீவு. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தீவு செல்வந்தர்களின் சொகுசு சுற்றுலா தீவாக விளங்கிறது. இங்குள்ள டீலக்ஸ் சூட்களின் மூன்று இரவுகள் தங்க, 2.5 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக 30 பேர் வரை இத்தீவில் தங்கிக்கொள்ளலாம். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த இந்த சொகுசுத் தீவு தற்போது வாடிக்கையாளர்களுக்குத் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு இல்லாத வசதிகளே இல்லை எனலாம்.

பூலோக சொர்கப்புரியாக திகழும் இந்த ஆடம்பரத் தீவில் தங்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள 12 சொகுசுக் கப்பல்கள், 30 டீலக்ஸ் சூட்கள், பீச் பார்பெக்கியூக்கள், ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. ஆனால் வெல்கம் ஷாம்பெயினைத் தவிர இங்கு மது இலவசமாக கிடைக்காது. வேண்டுமென்றால் தனியாக வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தீவில் தற்போது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவேளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பிறகு என்ன? அமெரிக்க செல்வந்தர்கள் கொரோனா அச்சத்தை மறந்து சொகுசுத் தீவுக்கு ஹாலிடேவை கொண்டாட குடும்பத்துடன் புறப்பட்டுவிட்டனர்.

Spread the love

Leave a Reply