ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 661 பேருக்கு கொரோனா

அபுதாபி : கொரோனா தாக்கம் அதிகரித்து அரபு எமிரேட்சில் புதிதாக 661 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நோயின் தாக்கம் சற்று தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மேலும் 661 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை கூறியது, மேலும் நோய் பாதிப்புகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். இதனால் அரபு எமிரேட்சில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,557 ஆக அதிகரித்தது. தொடர்ந்து நாட்டில் பலியானர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உள்ளது.

சிகிச்சைக்கு பின் 386 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,932 ஆக அதிகரித்தது. இதுவரை 37000 பேர் வரை பரிசோதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply