ஈரானில் ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா

டெஹ்ரான்: ஈரானில் ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா தொற்று சமீப காலத்தில் சற்று குறைந்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,562 ஆக உள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 7,942 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளதால் அந்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதுவரை 1,23,077 பேர் கொரோனாவின் பிடியிலிருந்து குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Leave a Reply