இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

கொழும்பு

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் ஒத்ட்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

வாக்குச் சாவடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளதென தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Leave a Reply