இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகை
பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு
உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதை விளக்கும் வகையில் உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

Spread the love

Leave a Reply