இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி!

புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது.

கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்னையால் சீன நிறுவனங்களின் செயலிகளான டிக் டாக் போன்றவற்றை பலர் தங்கள் அலைபேசியிலிருந்து நீக்கினர்.

இதற்கிடையில் சீனா – இந்தியா இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதனால் சீனா எதிர்ப்பு மனநிலை இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு உதாரணம் தான் ‘ரிமூ சீனா ஆப்ஸ்’ செயலி. ஒன்டச் ஆப் லேப்ஸ் என்ற நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் உருவாக்கிய இந்த செயலி ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ஸ்கேன் பட்டனை அழுத்தினால் நம் அலைபேசியில் இருக்கும் டிக் டாக், கேம்ஸ்கேனர், ஜின்டர் போன்ற சீன நிறுவன செயலிகளை பட்டியலிடும். நாம் அதனை எளிதில் நீக்கிக்கொள்ளலாம். தற்போது பிளே ஸ்டோரில் இவற்றை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிளே ஸ்டோரின் டாப் 10 இலவச செயலிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Spread the love

Leave a Reply