அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: அமெரிக்கா உடன் இணைந்து செயல்படவே விரும்புவதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார். ஆனாலும், உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாக, அறிவித்தார்.

இந்நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கூறுகையில், பல ஆண்டுகளாக அமெரிக்க அரசு மற்றும் அதன் மக்களின் பங்களிப்பும், தாராள மனப்பான்மையும் மகத்தானது. இந்த ஒத்துழைப்புடன் தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம், என்றார்.

Spread the love

Leave a Reply