3 ரெட்மி போன்களின் இந்திய விலை மீண்டும் உயர்வு

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை விற்பதின் விளைவாக இந்தியாவில் பிரபலமடைந்த சீன நிறுவனமான சியோமி அதன் ரெட்மி 8 ஏ டூயல், ரெட்மி 8, மற்றும் ரெட்மி நோட் 8 ஆகியவற்றின் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

இது இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மூன்றாவது விலை உயர்வு மற்றும் ஒரே மாதத்தில் நிகழும் இரண்டாவது விலை உயர்வும் ஆகும். புதிய மற்றும் திருத்தப்பட்ட விலைகள் இப்போது Mi.com, Flipkart, Amazon.in ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன, விரைவில் ஆஃப்லைன் கடைகளிலும் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.500 ஆகவும், ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.300 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டன. இந்த முறை, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் ரூ.500 ஆகவும், ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போன்களின் வைகை ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.11,499 க்கு வாங்க கிடைத்தது. இப்போது, மீண்டும் ரூ.500 விலை உயர்வுக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ரூ .13,999 விலையில் இருந்த ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை இப்போது ரூ.14,499 ஆக உயர்ந்துள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இப்போது இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,499 ஆகும், இது முன்பு ரூ.9,299 ஆக இருந்தது.

ரெட்மி 8 ஏ டூயலின் விலை ரூ.200 அதிகரித்துள்ளது. ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.7,499 ஆக உயர்ந்துள்ளது. இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,999 ஆகவே உள்ளது, அதாவது இந்த வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படவில்லை.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள்:

– 6.39 இன்ச் எஃப்.எச்.டி+ டிஸ்ப்ளே
– 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– டாட் நாட்ச் வடிவமைப்பு
– ஸ்னாப்டிராகன் 665 11nm ப்ராசஸர்
– அட்ரினோ 610 ஜி.பீ.யு
– மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
– கைரேகை ஸ்கேனர்

ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள்:

– 6.22 இன்ச் எச்டி+ 2.5 டி கர்வ்டு கிளாஸ் டாட்-நாட்ச் டிஸ்ப்ளே
– 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம்
– 2GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்
– 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
– மைக்ரோ எஸ்.டி கார்டுடன் 512 ஜிபி வரை சேமிப்பிட விரிவாக்கம்.
ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள்:

– 5,000 எம்ஏஎச் பேட்டரி
– 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
– ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பம்
– 6.22-இன்ச் (720×1520 பிக்சல்கள்) டிஸ்பிளே
– 19: 9 திரை விகிதம்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– க்வால்காம் ஸ்னாப்டிராகன் 439 ப்ராசஸர்
– 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு.

Spread the love

Leave a Reply