எந்த புது போனும் ஆர்டர் பண்ணலயா? நல்லது தான்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இப்போது உலகம் முழுவதுமாக பரவியுள்ள COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவற்றில் சில ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மற்றவர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளனர். அதன்படி விவோ, சியோமி, ஒப்போ, இன்பினிக்ஸ் மற்றும் கூகுள் போன்ற பிராண்டுகள் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக அடுத்த மாதம் அறிமுகமாகும் ஐந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தை பற்றிய தொகுப்பே இது!

விவோ எக்ஸ் 50 5ஜி

– ஜூன் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் ஆகிறது.

– கிம்பிள் போன்ற ஆன்டி-ஷேக் கேமரா தொழில்நுட்பம்

– OIS ஐ விட சிறந்த ஸ்டெபிலைசேஷன்

– 5 ஜி இணைப்பிற்கான ஆதரவு

– டிஸ்ப்ளேவின் மேல்-மைய நிலையில் முன்புறத்தில் பஞ்ச்-ஹோல் டிசைன்

– செவ்வக வடிவிலான க்வாட்-கேமரா அமைப்பு

– ரூ.31,990 க்கு அறிமுகம் ஆகலாம்.

கூகுள் பிக்சல் 4ஏ

– ஜூன் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

– 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி சேமிப்பு

– ஸ்னாப்டிராகன் 730 சிப்செட்

– 5.81 இன்ச் புல் எச்டி+ டிஸ்ப்ளே

– 2340 x 1080 பிக்சல்கள் ஸ்கிரீன் ரெசல்யூஷன்

– 443 பிபிஐ பிக்சல் அடர்த்தி

– 12.2 மெகாபிக்சல் ரியர் கேமரா

– 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா

– ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமை

– 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு

– 3,080 எம்ஏஎச் பேட்டரி

– 128 ஜிபி மாடல் விலை தோராயமாக ரூ .26,400 இருக்கலாம்

– 64 ஜிபி மாடல் தோராயமாக ரூ.22,600 இருக்கலாம்

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ

– ஜூன் 5 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனை

– டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன்

– 6.6 இன்ச் டிஸ்ப்ளே

– 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்

– ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமை

– கைரேகை ஸ்கேனர்

– ரூ.9499 க்கு அறிமுகம் ஆகலாம்.

ஒப்போ பைண்ட் X2 மற்றும் பைண்ட் X2 ப்ரோ:

– சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை

– 6.7-இன்ச் குவாட் எச்டி+ ஓஎல்இடி 2.5 டி கர்வ்டு டிஸ்பிளே

– 3168 x 1440 பிக்சல்கள் தீர்மானம்

– எச்டிஆர் 10+ ஆதரவு

– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு

– இன்டிஸ்பிளே கைரேகை சென்சார்

– 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 7nm ப்ராசஸர்

– பைண்ட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி

– 65W சூப்பர் வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

– பைண்ட் எக்ஸ் 2 ப்ரோவில் 4260 எம்ஏஎச் பேட்டரி

– 65W சூப்பர் வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

– ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ColorOS 7.1

– பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.74,890 க்கு அறிமுகம் ஆகலாம்

– பைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ரூ.58,590 க்கு அறிமுகம் ஆகலாம்

Spread the love

Leave a Reply