அன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்

தற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்ற இயங்குதளங்களுள் ஒன்றாக அன்ரோயிட் விளங்குகின்றது.

இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்புக்களை கூகுள் நிறுவனம் சீரான இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது அன்ரோயிட் 11 பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 3 ஆம் திகதி இப் பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வினை கூகுள் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடாந்தம் இடம்பெற்றுவந்த டெவெலொப்பர் மாநாட்டினை இந்த வருடம் கூகுள் நிறுத்தியுள்ளது.

இதனையடுத்தே நேரடி ஒளிபரப்பு மூலம் இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

Spread the love

Leave a Reply