221 விமானங்கள் இயக்கம் பயணியர் வருகை குறைவு

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று, 21 விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, சென்னைக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டு, ஐந்தாம் நாளான, மே, 29ல், நாடு முழுதும், 1,029 விமானங்கள் இயக்கப்பட்டு, 79 ஆயிரத்து, 941 பேர், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்தனர். ஆறாம் நாளான நேற்று, சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, ஐதராபாத், புவனேஸ்வர், அந்தமான், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு, கவுகாத்தி, மதுரை, திருச்சி, துாத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட, 21 நகரங்களுக்கு, விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களிலிருந்து, 21 விமானங்கள், சென்னைக்கு வந்தன. சென்னையில் இருந்து, டில்லி, அந்தமான், கவுகாத்தி, புவனேஸ்வர், கோல்கட்டா நகரங்களுக்கு, அதிக பயணியர் சென்றனர்.

ஆனால், பல்வேறு நகரங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.’கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து, சென்னைக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே இதற்கு காரணம்’ என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply