மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு

சென்னை: தொடர்ந்து 3 மாதமாக குறைந்த மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை, தற்போது 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.606.50 விலை குறைந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. தற்போது இன்று (ஜூன் 1ம் தேதி) அறிவிக்கப்பட்ட தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக குறைந்துள்ளது.

Spread the love

Leave a Reply