மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு மனு

புதுடில்லி : மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒபிசி, பிசி மற்றும் எம்பிசி ஆகிய பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஒபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply