பிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார்

மதுரை : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன் பா.ஜ.,வில் இணைந்தார்.

கொரோனா ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகர் சலுான் கடைகாரர் மோகனை நேற்றைய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர்களை கட்சியினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Spread the love

Leave a Reply