தமிழகத்தில் மேலும் 1,515 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது. குறிப்பாக கடந்த ஏழு நாட்களாக நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்தது.


இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சியாக இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 135 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் சென்னை மாநகரை சேர்ந்தவர்கள் மட்டும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்ற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோன்று, கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் இரட்டை இலக்கமாக உள்ளது. அதாவது இன்று மட்டும் கொரோனாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 18 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், இன்று மட்டும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 604 பேர், கொரோனா சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்புது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

Spread the love

Leave a Reply