தமிழகத்தில் முதலீடு: கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்
சென்னை:பென்ஸ், ஆடி உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
உலகளவில் மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பென்ஸ் , ஆடி, டெஸ்லா, பி.எம்.டபிள்யூ., ஹோண்டா, மெர்சிடிஸ். ஸ்கோடா, ஜாக்குவார் லேண்ட்ரோவர், டொயோட்டா, வோக்ஸ் வேகான் உள்ளிட்ட 11 முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் உள்ள சாதகமானஅம்சங்களை குறிப்பிட்டும், முதலீடு செய்வதால் அளிக்கப்படும். முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை தமிழக அரசு வழங்கும் எனவும் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படுவது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.