தமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில், குறிப்பிடும்படியாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மேலும் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 22 ஆயிரத்து 047 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1479 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

Leave a Reply