சென்னை ஆவின் பால் பண்ணை ஊழியர் கொரோனாவால் பலி..!
சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மிஷின் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த மே 26ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்த வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் சென்னையில் கொரோனாவால் 10 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2737 ஆக உயர்ந்துள்ளது.