சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்

சென்னை: சென்னையில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனை செய்பவர்களிடம் ஆதார் எண் , பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற வேண்டும். ஆதார் இல்லாதபட்சத்தில், முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்கு வருவோரின் மொபைல் எண்ணை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் . இது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது சென்னையில் 10 அரசு , 13 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

Spread the love

Leave a Reply