சென்னையில் ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் (மே 31) ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பில் 14,802 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புது உச்சத்தை அடைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு, இன்றும் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,149 பேரில் சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 85 பேர், திருவண்ணாமலையில் 55 பேர், சேலத்தில் 49 பேர், திருவள்ளூரில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love

Leave a Reply