சென்னைக்கு அப்புறம் செங்கல்பட்டு… தமிழகத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது தினமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்றைய எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினந்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11,094 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இன்று குணமானவர்களின் எண்ணிக்கை 536. ஆகையால் இன்றோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 13 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

Leave a Reply