கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை தொல்லியல் அதிகாரி ஆய்வு

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய-மாநில அரசுகள் சார்பில் அகழாய்வு பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்றது. தற்போது 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன. கீழடியில் நீதி அம்மாள் என்பவர் நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதில் சிறிய பானை, பெரிய பானை, செங்கல் கட்டுமான பகுதி, விலங்கின எலும்புக்கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கொந்தகையில் சில குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முதுமக்கள் தாழி மற்றும் சிறிய வகை பானைகள், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மண் பானை ஓடுகள், நத்தைகூடுகளும் மணலூரில் சுடுமண் உலையும் கிடைத்தன. இந்தநிலையில் கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை நேற்று தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மனித உடல் எலும்புகள் அதிகமாக கிடைத்துள்ளன. அவைகளை சேகரித்து தனியாக கவரில் வைத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வுக்கு பிறகு எந்த வருடத்தை சேர்ந்தது என்ற விவரம் தெரியவரும். இதுபோல் இன்னும் சில முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்படாமல் மணல் மூடியபடியே உள்ளன.

Spread the love

Leave a Reply