கத்தாரில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தனர். அவர்களில் 13பேர் நேற்று காரைக்குடி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர். இதேபோல் ஏற்கனவே இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 41பேர் அங்கு ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை முடிந்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல குவைத்தில் இருந்து வந்த 5 பேரை சுகாதாரத்துறையினர் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தியுள்ளனர்.

Spread the love

Leave a Reply