இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிவடைந்துள்ளதையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதை தவிர திருத்தணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி அல்லது அதற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது.
அதேசமயம், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றம் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன்கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Spread the love

Leave a Reply