மீண்டும் தேசிய விளையாட்டு ஒத்திவைப்பு

புதுடில்லி: இந்தியாவில் தேசிய விளையாட்டு படாத பாடுபடுகிறது. இம்முறை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 2015ல் 35 வது தேசிய விளையாட்டு (கேரளா) நடந்தது. அடுத்து 2016ல் இந்த விளையாட்டு கோவாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களுக்கு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக இது 2019, மார்ச் 30–ஏப். 14ல் நடக்க இருந்தது. இம்முறை பொதுத்தேர்தல் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது.

பின் வரும் அக். 20 முதல் நவ. 4 வரை நடக்க கோவா முடிவு செய்தது. ஆனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய விளையாட்டு இம்முறை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் நரிந்தர் பத்ரா, வெளியிட்ட செய்தியில், ‘கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், தேசிய விளையாட்டை காலவரையின்றி ஒத்திவைக்க, போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று தேதி குறித்து முடிவு செய்யப்படும்,’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

Spread the love

Leave a Reply