பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும்

பாரீஸ்,

பாரீஸ் நகரில் மே 24-ந்தேதி தொடங்க இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சத்தால் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதற்கான தொகையை இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. புதிய தேதியில் போட்டி நடந்தால் மறுபடியும் டிக்கெட் விற்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு (2020) கட்டாயம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்ட் கியூடிசில்லி உறுதியளித்துள்ளார். மேலும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு போட்டி நடத்தப்படும் என்றும், எனினும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை நிச்சயம் பின்பற்றுவோம் என்றும், போட்டி அரங்கில் எத்தனை பார்வையாளர்கள் அமரவேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply