நீரஜ் சோப்ராவுக்கு கிடைக்குமா ‘கேல் ரத்னா

புதுடில்லி: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கப்படும். இதற்கான பரிந்துரை பட்டியலை வரும் ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்திய தடகள கூட்டமைப்பு (ஏ.எப்.ஐ.,) சார்பில் ‘கேல் ரத்னா’ விருதுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 22, பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர், தொடர்ந்து 3வது முறையாக இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ல் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இவர், ‘அர்ஜுனா’ மற்றும் ‘கேல் ரத்னா’ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இவருக்கு ‘அர்ஜுனா’ விருது வழங்கப்பட்டது. பின், 2018ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் விருது கிடைக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் 87.86 மீ., துாரம் எறிந்த நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

 

ஏற்கனவே ஒடிசா மாநில அரசு சார்பில் ‘அர்ஜுனா’ விருதுக்கு இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு நடந்த உலக பல்கலை., விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார்.

Spread the love

Leave a Reply