கோலியே சிறந்த பேட்ஸ்மேன் – பிராட் ஹாக் கணிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், ‘யுடியூப் வீடியோ’ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) சிறந்த பேட்ஸ்மேன் இந்திய கேப்டன் விராட் கோலியா? துணை கேப்டன் ரோகித் சர்மாவா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விராட் கோலி என்று பதில் அளித்தார்.

இது குறித்து ஹாக் கூறும் போது, ‘இந்திய அணி பெரிய இலக்குகளை துரத்தும் போது விராட் கோலி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பெரும்பாலும் இந்திய அணி 2-வது பேட்டிங் செய்யும் போது அவர் நிலைத்து நின்று அசத்துகிறார். அதே சமயம் அணியில் வெவ்வேறு விதமான பங்களிப்பை அளிக்கும் அவர்களை உண்மையிலேயே ஒப்பிட முடியாது.

பீல்டிங் கட்டுப்பாடு உள்ள தொடக்கத்தில் புதிய பவுலர்களின் பந்து வீச்சில் அதிரடியாக ஆக்ரோஷம் காட்டுவது ரோகித் சர்மாவின் பணி. கடைசி வரை களத்தில் நிற்பதை உறுதி செய்யும் வகையில் இன்னிங்ஸ் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது விராட் கோலியின் பொறுப்பு. ஒருவருக்கொருவர் தங்களது பணியை நிறைவு செய்யும் வகையில் ஆடுகிறார்கள்’ என்றார்.

Spread the love

Leave a Reply