இந்திய ஹாக்கி அணிகள் வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கின

பெங்களூரு:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடபட்ட நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் முறையான மற்றும் கட்டமைக்கபட்ட வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கிய நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) ஐத் தொடர்ந்து தேசிய அணிகள் வெளிப்புறப் பயிற்சியைத் தொடங்கியதாக ஹாக்கி இந்தியா (எச்ஐ) தெரிவித்துள்ளது.

“மூத்த ஆண்கள் மற்றும் மூத்த பெண்கள் குழுவினருக்கான விளையாட்டு நடவடிக்கைகள் 2020 ஜூன் 1 திங்கள் அன்று இந்திய விளையாட்டு ஆணையம், பெங்களூரு வளாகத்தில் தொடங்கப்பட்டன. என இந்திய ஹாக்கி அமைப்பு ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

சாய் பெங்களூர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் எஸ்ஓபிக்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

Spread the love

Leave a Reply