இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டித் தொடர் நடத்த முடிவு

வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூனில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடுவதாக இருந்தது.

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் தொடரை நடத்தலாம் என திட்டமிடப்பட்டது.

இதன்படி இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சு வார்த்தை நடத்தியதில், ரசிகர்கள் யாருமின்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முதலாவது டெஸ்ட் ஜூலை 8-ந்திகதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் திகதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 24-ந்திகதியும் தொடங்குகிறது.

போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த போட்டிக்காக மேற்கிந்திய தீவுகள் அணி வருகிற 8-ந்திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்லவுள்ளது.

Spread the love

Leave a Reply