2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்

புதுடில்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்த திட்டமிட பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இது வரையில் 17 மாநிலங்கள் இணைந்துள்ளன. தற்போது மேலும் ஒடிசா ,சிக்கிம், மிசோரம் மாநிலங்கள் இணைந்துள்ளன இதனையடுத்து இத்திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட், நாகலாந்து ,மணிப்பூர் மாநிலங்கள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதன்மூலம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை நாடு முழுவதும் எந்தவித பிரச்னையும் இன்றி செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. என அமைச்சர் கூறினார்.

Spread the love

Leave a Reply