வரும் தேர்தலில் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்குவர் : உள்துறை அமைச்சர் அமித்ஷா

புது டெல்லி : சிறுபான்மையினரை சமாதனப்படுத்தும் வகையில் சி.ஏ.ஏவை எதிர்க்கும் முதல்வர் மம்தாவை மாநில மக்கள் வரும் தேர்தலில் அரசியல் அகதியாக்குவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அமைச்சர் பேசியதாவது: இன வன்முறை நடந்து வரும் ஒரே மாநிலம் மே.வங்கம் தான். சட்ட விரோத ஆயுதங்களை தயாரிப்பதே மே. வங்கத்தில் வளர்ந்து வரும் ஒரே தொழில். அரசியல் போரை நடத்த பா.ஜ., இங்கு வரவில்லை. வங்கத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவே பா.ஜ., இம் மாநிலத்தில் உள்ளது.

கம்யூனிஸ்ட்கட்சிகளுக்கு 34 ஆண்டுகள் வாய்ப்புகொடுத்தீர்கள். மம்தாதீதிக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஒரு காலத்தில் பீகார் பின்தங்கிய மாநிலமாக இருந்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு பின்னர் வளர்ச்சி பாதையில் உள்ளது.உ.பி.,மாநிலம் வெறும் மூன்றே ஆண்டுகளில் முன்னேறி உள்ளது.

அரசியல் வன்முறை காலாச்சாரம் செழித்து வரும் ஒரே மாநிலம் மே. வங்கம். சிறுபான்மை மக்களை சமாதானப்படுத்தும் வகையில் சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து வருகிறார். இதற்காக மக்கள் மம்தாவை ஒரு அரசியல் அகதியாக்குவர். மம்தா பானர்ஜி ‘ஷ்ராமிக் ஸ்பெஷல்’ ரயில்களில் மாநிலத்திற்கு திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘அவமதித்துள்ளார்’. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அந்த ரயில்களை ‘கொரோனா எக்ஸ்பிரஸ்’ என்று அழைத்தார்.

தொடர்ந்து மம்தாவை பற்றி குறிப்பிட்ட அமித்ஷா நீங்கள் குடியேறியவர்களை அவமதித்தீர்கள், அவர்களின் காயங்களுக்கு உப்பு தேய்த்தீர்கள். இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்.’கொரோனா எக்ஸ்பிரஸ்’ உங்களை ஆட்சியில் இருந்து வெளியேற்ற அழைத்துச் செல்லும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மே.வங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசு திட்டங்களிலிருந்து மாநிலம் பயனடைவதை மம்தா பானர்ஜி விரும்பவில்லை
இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Spread the love

Leave a Reply