முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பின்னணியில் யார்?

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ள இந்த மர்ம நபரின் மிரட்டலைத் தொடர்ந்து முதலமைச்சரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காலையில் மாநகராட்சி அதிகாரிகளுடம் ஆலோசனை முடித்த பிறகு, இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கவிருக்கிறார் முதலமைச்சர். இந்நிலையில், இப்படி மர்ம நபர் மூலமாக மிரட்டல் வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply