மத்திய அரசிடம் ரூ 5000 கோடி நிதியுதவி கேட்கிறது டில்லி அரசு

புதுடில்லி: மத்திய அரசிடம் ரூ 5000 கோடி நிதியுதவி கேட்டு டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி துணை முதல்வர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், ‘கொரோனா பரவல் காரணமாக டில்லியில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் 85 சதவீதம் முடங்கி விட்டது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் மத்திய அரசின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மணீஷ் சிசோடியா, ‘ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்காக மாதம் தோறும் ரூ 3,500 கோடி தேவைப்படுகிறது. கடந்த 2 மாதஙகளாக ஜிஎஸ்டி வரியாக டில்லி அரசுக்கு 1000 கோடி மட்டுமே கிடைத்துள்ளது’இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply