பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தி.மு.க., கூட்டணி கட்சிகள்

சென்னை : மருத்துவப்படிப்பில், பிற்பட்டோருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் – ம.தி.மு.க., – இந்திய கம்யூனிஸ்ட் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.தீர்மானங்கள் விபரம்: இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுதும் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்தப்படும் ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மத்திய அரசு, 7,500 ரூபாய்; மாநில அரசு, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்

 புதிய மின்சார திருத்த சட்டத்தை, உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் கொரோனா பேரிடரில் இருந்து, மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னலமற்று பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள், சுகாதார துறை பணியாளர்கள், போலீசார், அரசு ஊழியர்களுக்கு நன்றி.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Spread the love

Leave a Reply