தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் சந்திரசேகரராவ்

ஐதராபாத் : தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு இன்று (ஜூன்.,2) அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானாவின் கவர்னரான தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று (ஜூன்.,2) தனது பிறந்தநாளை கொண்டாகிறார். ராஜ்பவனில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். முதல்வர் வாழ்த்துக்களை ஏற்று, கவர்னர் கூறியதாவது : சுதந்திர போராட்டத்திற்கு பிறகு மாநில இயக்கம் நீண்ட போராட்டமாக இருக்கிறது. தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட இதே நாளில் எனது பிறந்தநாள் வருவது மிகுந்த மகிழ்ச்சி. தெலுங்கானாவை சிறப்பான பாதையில் வழிநடத்தும் முதல்வருக்கு எனது பாராட்டுகள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், தெலுங்கானா மாநிலத்தின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நன்மைக்காக பலர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அந்த தியாகிகளுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்திய பின் கொடி ஏற்றி வைக்கப்படும். இவ்வாறு கூறினார். மேலும் முதல்வருடன் ராஜ்யசபா உறுப்பினர்களான டாக்டர் கே. எம்.எல்.ஏ.க்கள் ஜீவன் ரெட்டி, நாகேந்தர், ரைத்து பந்து மாநிலத் தலைவர் பல்லா ராஜேஸ்வர் ரெட்டி, எம்.எல்.சி.க்கள் கர்னே பிரபாகர், சீனிவாஸ் ரெட்டி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் பி.வினோத் குமார், டி.எஸ்.ஐ.சி தலைவர் கடாரி பாலா மல்லு, டி.எஸ்.சி.எஸ்.சி தலைவர் மாரெடி சீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் கவர்னர் தமிழிசைக்கு வாழ்த்து கூறினர்.

Spread the love

Leave a Reply