தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில், நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை : தி.மு.க., தலைவர் மற்றும் நிர்வாகிகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், நாளை, மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
தமிழகத்தில், உயர் பதவிகளில் உள்ள, பட்டியலின மக்களை, தொடர்ந்து இழிவாக பேசி வரும், தி.மு.க., நிர்வாகிகளை கண்டித்தும், தரக்குறைவான பேச்சுகளை கண்டிக்காத, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், நாளை காலை, 10:30 முதல், 11:00 மணி வரை, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி, அ.தி.மு.க.,வினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, நான்கு அல்லது ஐந்து இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.