‘ஆன்லைன்’ பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா உரை

கோல்கட்டா: ‘பேஸ்புக்’ வாயிலாக 8ம் தேதி, ‘ஆன்லைன்’ பொதுக்கூட்டம் நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதில், அமித் ஷா தலைமையேற்று, உரையாற்றுகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த, நாடு முழுதும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில், ‘பேஸ்புக்’ சமூகவலைதளம் வாயிலாக, வரும், 8ம் தேதி, ‘ஆன்லைன்’ பொதுக்கூட்டம் நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தலைமையேற்று, உரையாற்ற உள்ளதாக, மேற்கு வங்க, பா.ஜ., தலைவர், திலிப் கோஷ், நேற்று அறிவித்தார். ‘இந்த கூட்டத்தில், நரேந்திர மோடி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின், முதலாம் ஆண்டு சாதனைகள் குறித்து, விளக்கப்படும்’ என, கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply