வீட்டில் எல்லோரும் சேர்ந்திருக்கும் ஊரடங்கு சமயத்தில் என்னவெல்லாம் பேசலாம்?

நாம் இதுவரை அவசர உலகில் வாழ்ந்து வந்தோம். முகத்திற்கு முகம் நேராக உட்கார்ந்து கூட பேச நேரமில்லை. மொபைல் போன் மூலம் பேசிக் கொண்டு இருந்த குடும்ப நபர்களுடன் இன்று உட்கார்ந்து பேசும் அளவிற்கு நேரம் கிடைத்துள்ளது. முன்னெப்போதையும் விட தற்போது எல்லாரும் ஒன்றோடொன்று இணைந்து வாழ்கிறோம். தகவல் தொடர்புகள் நம் அழகான தொடர்புகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டது. குடும்ப நபர்களுடன் சேர்ந்து சாப்பிட நேரமில்லை, உங்க அன்பான வரின் சிரிப்பை பாராட்ட நேரமில்லை, குழந்தைகளுடன் விளையாட நேரமில்லை. ஆனால் தற்போது எல்லாம் மாறியுள்ளது. எல்லாரும் இணைந்து உணவு அருந்தக் கூடிய தருணம் ஏற்பட்டு உள்ளது. அப்படி என்றால் உங்க குடும்ப உரையாடல் எப்படி இருக்க வேண்டும். கண்டிப்பாக அது ஒரு அர்த்தமுள்ள உடையாடலாக இருக்க வேண்டும்.

எனவே குடும்ப உரையாடலை ஒருவர் ஆரம்பிப்பதற்கு முன்பு அதில் பங்கேற்பதில் உண்மையில் அக்கறையுடன் இருக்க வேண்டும். திறந்த கேள்வியுடன் உங்க உரையாடலை தொடங்கலாம். உங்க அன்புக்குரியவர் பற்றி விசாரிக்கலாம். அவருடன் ஒன்றாக செலவழித்த நேரங்கள் குறித்து நினைவூட்டலாம், ஆழ்ந்த உரையாடலை தொடர சில உரையாடல் விளையாட்டுகளைக் கூட நீங்கள் செய்யலாம்.

குடும்ப உரையாடலை தொடங்குவதற்கு முன் எவ்வாறெல்லாம் ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ.

சமீபத்தில் உங்க வாழ்க்கையில் என்ன நடக்கிறது


இது ஒரு வித்தியாசமான கேள்வி. ஆனால் அனைவரும் ஆவலுடன் பேசக் கூடிய கேள்வியும் கூட. எல்லாரும் கூடி இருக்கும் சமயங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள முற்படலாம். ஒருவருக்கொருவர் அவர்களின் நல்வாழ்வில் உன்னதமான ஆர்வத்தை காட்டலாம்.

பொழுதுபோக்குகளை தொடர்கிறீர்களா

ஒரு குடும்பம் என்று எடுத்தால் அதில் பல வித்தியாசமான நபர்கள் இருப்பார்கள். உதாரணமாக வேலை செய்யும் பெற்றோர், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் ஓய்வுபெற்ற வயதானவர்கள் இருக்கலாம். இருப்பினும் எல்லாருக்கும் ஒரு ஆர்வம் அல்லது பொழுது போக்கு இருக்கும். எனவே அவர்களின் ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் குறித்து கேட்பது குடும்ப உறுப்பினர்களின் தனித்துவத்தை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

இன்னும் நிறைவேற்ற முடியாத கனவு மற்றும் விருப்பம் என்ன

இந்த கேள்வி அனைவரின் மனதிலும் எழும்பக் கூடிய கேள்வி தான். இது குடும்ப உறுப்பினர்களை பற்றிய நுனிக்கமான புரிதலை வழங்குகிறது. இந்த கேள்வி அவர்களை நம்முடன் நெருங்க வைக்கிறது.

உங்களைப் பற்றி 5 வார்த்தைகளில் சொல்லுங்கள்

இது போன்ற கேள்விகள் உங்க குடும்ப உறுப்பினர்கள் பற்றிய முக்கியமானவற்றை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர் கூறும் விஷயங்களில் இருந்து அவர்களை அறிந்து கொண்டு உறவுகளில் நீங்கள் செயல்பட முடியும். இதன் மூலம் உங்க உறவும் வலுப்படும். அவர் மீது நீங்கள் வைத்த தவறான கருத்துகள் கூட மாறுபடலாம் வாய்ப்புள்ளது.

உங்களுடைய முதல் ஞாபகம் எது?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். குடும்ப நபர்களின் நினைவுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உறவுகளின் நெருக்கம் அதிகமாகும். அவர்களின் நினைவுகள் அழகாக இருந்தால் பாராட்டுங்கள். இதன் மூலம் அவர்கள் மகிழலாம்.

உங்க அன்பானவர் உங்க வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்

குடும்பம் என்றாலே அன்பும் ஆதரவும் நிறைந்த ஒன்று. உதாரணமாக நபர் B இன் வாழ்க்கையில் நபர் A எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்? என்ற கேள்வி உறவுகளுக்குள் பிணைப்பை உருவாக்கவும் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நிறைய விஷயங்களை செய்யலாம். ஆனால் அவை சில நேரங்களில் வாழ்க்கையின் சலசலப்பில் கேட்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே குடும்ப உறுப்பினர்களுடான உரையாடல் தான் இதற்கான சிறந்த திறவுகோல். நீங்கள் கேட்கும் கேள்விகள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பிணைப்பை தருகிறது. குடும்பத்தில் அவர்களின் பங்களிப்பை இதன் மூலம் பாராட்ட முடியும்.

எனவே உங்களுடைய கேள்விகள் மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குங்கள். இது குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை தூண்டுகிறது.

 

Spread the love

Leave a Reply