மேட்ரிமோனியலில் வரன்கள் தேடும்போது போலியான வரன்களை எப்படி கண்டுபிடிப்பது?

தற்போது திருமணத்திற்காக வரன்கள் தேடுவது எளிதாகி உள்ளது. ஆணும் பெண்ணும் தங்களுக்கு பொருத்தமான துணையை மேட்ரிமோனியல் வலைதளங்களில் இருந்தே பெற முடிகிறது. இந்த மேட்ரிமோனியல் வலைதளங்களில் உங்களுக்கு எந்த மாதிரியான வரன் வேண்டும், உங்களைப் பற்றிய விவரங்களை பட்டியலிட்டாலே போதும் அதன் அடிப்படையில் வரன்களை பெற முடிகிறது. இருப்பினும் இங்கேயும் போலி முகவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம்மளுக்கு தேவைப்படும் விவரங்களை போட்டு நம்மளை ஏமாற்றும் வேலையை செய்வதே இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதை நம்பி ஏமாறுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இதை எப்படி கண்டறிவது, அதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

போலி கணக்குகளை எப்படி கண்டறிவது

மேட்ரிமோனியல் சேவையில் பல நன்மை தரும் விஷயங்களும் இருக்கின்றனர். நம்முடைய சுய விவரங்கள் அவர்களுடைய சுய விவரங்கள் அடிப்படையில் இதைச் செய்யலாம். எனவே பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான வரன்களை தேட இதை பதிவு செய்கின்றனர். ஆனால் அதே சமயம் போலி முகவர்களும் இந்த தளங்களில் தடமாடுவதால் போலி கணக்குகள் மற்றும் வஞ்சகர்களை கண்டறிய சில குறிப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இதன் மூலம் சரியான வாழ்க்கை துணையை நீங்கள் கண்டறிய முடியும்.

சுயவிவரப்படம்

ஒரு படம் என்றால் அது ஆயிரம் சொற்களை பேசும் என்பார்கள். எனவே உங்களுக்கான வரன்களை தேடும் போது அந்த படத்தைக் கொண்டே அவர்களை பற்றி நீங்கள் அறிய முடியும். முகவர்களின் படங்கள் இடம் பெறா விட்டால் அத்தகைய கணக்குகளிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது. பிறகு அந்த நபரின் வயது, காட்டப்பட்ட படத்துடன் பொருந்துகிறதா என்பதை காணுங்கள். அந்த படங்கள் திருத்தப்பட்ட படங்களாக இருக்கிறதா என்பது குறித்து பகுப்பாய்வு செய்யுங்கள். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.

சீரற்ற தகவல்கள் விவரங்கள் இருந்தால் ஆராயுங்கள்

சீரற்ற தகவல்கள் மற்றும் விவரங்கள் இருந்தால் அதைத் தேட ஆரம்பியுங்கள். முதலில் மேட்ரிமோனியல் வலைதளங்களில் ஒரு நபர் பதிவு செய்ய அவருடைய அடிப்படை தகவல்களை பதிவு செய்வது அவசியம். எனவே அடிப்படையான விஷயங்களை தேடுங்கள். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் அணுகுங்கள்.

அடிக்கடி திருத்தங்கள் செய்தல்

ஒரு ஆராய்ச்சியின் படி போலி முகவர்கள் அடிக்கடி திருத்தங்களை செய்வதாக கூறப்படுகிறது. அந்த நபர் சாதி, பொழுதுபோக்குகள், தொழில் போன்ற தனது தரவை அடிக்கடி மாற்றுவதை நீங்கள் கவனித்தால், அவர் முன்பு வைத்திருந்த தவறான தகவல்களை மறைக்க அவர் இதை முயற்சிக்கக்கூடும். நீங்கள் ஒன்று அல்லது இரண்டு தவறுகளை செய்யலாம். ஆனால் ஒரு நபர் தனது தொழில், சாதி, மதம் போன்றவற்றை எவ்வாறு தவறாகப் பெற திருத்தம் செய்து கொண்டே இருக்க முடியும் என்பதை யோசியுங்கள். எனவே அடிக்கடி திருத்தம் செய்யும் நபரை ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நபர் உங்க மீது அதிக அழுத்தம் கொடுத்தால்

சில பேர் உங்களை ஏமாற்றி காரியம் சாதித்து விட்டு கழட்டி விடும் நபர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உங்களை சீக்கிரம் முடிவெடுக்கும் படி அவசரப்படுத்தக் கூடும். எனவே அவர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப விஷயங்களைச் செய்ய உங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் செய்வார்கள். எனவே நீங்கள் முடிவெடுக்க இடமும் நேரமும் கொடுக்கவில்லை என்றாலோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வெளியே விடாமல் மறைத்தாலோ கவனமாக இருங்கள். அவர்களிடம் இருந்து தனித்தே இருப்பது நல்லது. மேற்கண்ட வழிமுறைகள் நீங்கள் வலைதளங்களில் போலி முகவர்களை கண்டு ஏமாறாமல் இருக்க உதவி செய்யும்.

Spread the love

Leave a Reply