சமூக வலைத்தளத்தில் உங்களுடைய உறவுகளை பகிர்ந்து கொள்ளலாமா?

முந்தைய காலத்தில் உறவு என்பது ஒளிவு மறைவான ஒரு விஷயமாக இருந்தது. குடும்பம், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், குடும்பத்தை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே செல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இருப்பதில்லை. குடும்ப நிகழ்ச்சிகளிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வரை அனைத்தையுமே நாம் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எல்லாவற்றிலும் பகிர்ந்து வருகிறோம். இப்படி உறவுகளை பற்றி வெளிப்படையாக தெரிவிப்பது நல்லதா. இல்லையென்றால் சமூக வலைத்தளங்களில் உறவுகளை ரகசியமாக வைக்க வேண்டுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம்.

உங்க உறவு பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அறிவிப்பது நல்லதா. நீங்கள் சமூக வலைதளங்கள் போன்ற பரந்த மேடையில் அதைப் பகிரும் போது தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க முடியாது. எனவே நீங்கள் திறந்த உறவு நிலையை மேற்கொண்டால் அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பொது மேடையில் அதிகாரப்பூர்வமாக அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே சமூக வலைத்தளங்களில் உறவுகளை பற்றிய ஸ்டேட்டஸ் போடுவது சரியா, ஏன் உறவுநிலையை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் இதோ உங்களுக்கான சில காரணங்கள்.

தேவையற்ற வதந்திகளை தவிருங்கள்உங்கள் உறவை சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தும் போது அதை மக்களின் கருத்துகள் மற்றும் தீர்ப்புகளுக்கு திறந்து விடுகிறீர்கள். மக்கள் எப்போதும் விவாதிக்க வதந்திகளை பரப்ப நிறைய விஷயங்களை தேடுகிறார்கள். எனவே அவர்கள் உற்சாகமாக பேச உங்களைப் பற்றிய பேச்சு கிடைத்து விடுகிறது. எனவே தேவையற்ற குழப்பத்தையும் நாடகத்தையும் நீங்கள் தவிர்க்க விரும்பினால் உங்க உறவு நிலையை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது. எனவே உங்க உறவை பற்றி சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள்.

உங்கள் காதல் விவகாரத்தை அம்பலப்படுத்துவது


நிறைய பேர் காதல் தோல்வி, காதல் வெற்றி என்றால் உடனே அதை சமூக வலை அம்பலப்படுத்தி விடுகிறார்கள். இதனால் இதுவரை நீங்கள் மட்டுமே கவனித்து வந்த உறவு நிலை தற்போது மற்றவர்களாலும் பார்க்கப்படுகிறது. உங்க உறவை பற்றி உங்களை விட வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே இதை நீங்கள் பகிரங்கப்படுத்துவதன் மூலம் உங்க உறவு நிலைக்கு எந்த தொடர்பும் இல்லாதவர்களிடம் இருந்து அதிக கவனத்தை பெறுகிறீர்கள்.

​உங்க துணைக்கு அழுத்தம் கொடுத்தல்


நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போது அதைப்பற்றி முழு உலகிற்கும் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் உங்க துணை அப்படி இருக்க விரும்பாமல் இருக்கலாம். அவர் உங்க உறவை பற்றி மற்றவர்கள் பேசுவதை விரும்பாமல் இருக்கலாம். உறவைப் பற்றிய ரகசியங்களை அவர் ரகசியமாக வைப்பவராக இருக்கலாம்.

உறவுகள் உடையும் போது சிக்கல் வர வாய்ப்புள்ளது


தற்போது காதலில் பிரேக்அப் என்பது சாதாரண ஒன்று. எனவே நீங்கள் காதலை பகிரங்கப்படுத்தும் போது சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்க உறவுகள் உடைந்த பிறகும் கூட இதைப்பற்றி மற்றவர்கள் பேச நேரிடலாம். இதனால் நீங்கள் புது உறவை புதுப்பிக்கும் போது ஏராளமான சலசலப்புகள், மனம் உடைந்து போதல் போன்றவை ஏற்படலாம். எனவே உங்க காதல் உறவை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது.

​கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளை தவிர்க்க


உங்க உறவுகளை ரகசியமாக வைத்திருப்பது மற்றவர்களின் கவனத்தில் இருந்து உங்களை காக்கும். தனிப்பட்ட முறையில் தனிமையில் இருப்பதற்கும், சமூக மேடையில் அறிவிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே உங்க உறவை நீங்கள் பகிரங்கப்படுத்தும் போது அதை மற்ற கண்களை கவனிக்க வைக்கிறீர்கள். எனவே அதற்கு மக்கள் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைப்பதை தவிர்க்க முடியாது. இது கொஞ்ச காலத்தில் ஒரு தொல்லையாகக் கூட மாறும்.

​மோசமான சமூக வலைதள நபர்கள்


சமூக வலைத்தளங்களில் உங்களை பின்பற்றுகிற எல்லா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கிடையாது. சிலர் மோசமான எண்ணங்கள் கொண்டவராகக் கூட இருக்கலாம். எனவே உங்க உறவுகளை பற்றி நீங்கள் பகிரங்கமாக போடும் போது அவர்கள் மோசமாக விமர்சிக்க வாய்ப்புள்ளது. இது உங்க உறவை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. அவர்கள் உங்களுக்குள் கவலையை எழுப்ப வாய்ப்புள்ளது. எனவே உங்க உறவை ரகசியமாக வைத்து மற்றவர்களின் தேவையற்ற தீர்ப்புகளையும் ரகசியங்களையும் தவிருங்கள்.

Spread the love

Leave a Reply