வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வேலை வாய்ப்பு பெற மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ள இந்தியர்கள் உள்நாட்டில் வேலை பெறும் நோக்கத்தில் அவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு திரும்பும் திறமை வாயந்த பணியாளர்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஸ்வேதேஸ் என்னும் வேலைவாய்ப்பு உதவிக்காக திறன் வாய்ந்த பணியாளர்கள் வருகை தகவல் தரவுதளத்தை ( SWADES; Skilled Workers Arrival Database for Employment Support) மத்திய அரசு துவங்கி உள்ளது

இதன் மூலம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை அரசு சேகரித்து வைக்கும். தொழில் முனைதல் அமைச்சகம், விமானப்போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவு அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் தகுதியுள்ள நபர்களின் தரவுதளத்தை அவர்களின் திறமைகள் அடிப்படையில் உருவாக்கி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். நாட்டில் உள்ள தகுந்த வேலை வாய்ப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் நிறுவனங்களுடன் பகிரப்படும். ஆன்லைன் ஸ்வேதேஸ் திறன்கள் அட்டையை நாடு திரும்பும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

இது குறித்து பேசிய மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் ஆதரவு அளிக்க வேண்டும். வந்தேபாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியவர்களின் திறன்கள் குறித்த தகவ்லகளை விவரணையாக்கம் செய்ய, விமானப்போக்குவரத்து, அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ இவ்வாறு தெரிவித்தார்.

கேரளா தமிழகம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply