பொருளாதாரத்தை மீட்பதில் முன்னிலை வகிக்க போகும் மாநிலங்கள்

புதுடில்லி : ஊரடங்கில் இருந்து இந்தியா மீண்டு வர, பொருளாதாரத்தை மீட்பதில், தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முன்னிலையில் வகிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய எலாரா செக்யூரிட்டீஸ் தொழில் அமைப்பின் கரீமா கபூர் கூறுகையில், கேரளா, பஞ்சாப், தமிழகம், ஹரியானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. அங்கு, மின்சாரம் நுகர்வு, போக்குவரத்து நெரிசல், மொத்தவிற்பனை மார்க்கெட்களுக்கு விவசாய பொருட்கள் வருகை ஆகியவை துவங்கியுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் மிகுந்த மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.

சாதாரண பொருளாதார நடவடிக்கைகளை துவக்குவதே, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு தூண்டுதலாக இருக்கும். நாட்டின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கண்ட போதும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் அப்படியே உள்ளது. இந்த ஆய்வில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மின்சார தேவை அதிகரித்துள்ளது, விவசாய தேவை, அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. டில்லியிலும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, நுகர்வோர்கள் தங்களது நுகர்வு மறையை மாற்றி கொண்டது கூகுள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

சலூன் சேவைகள், ஏசி, விமான பயணம், பைக்குகள், வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. ஊரடங்கு அதிகரித்த உடன், மருந்து, பலசரக்கு பொருட்கள், சோப்புகள் ஆகியவை குறித்து இணையத்தில், அதிகளவில் தேடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் , ஹெட்போன், ஹேர் ஆயில், லேப்டாப், மொபைல் போன்கள் நகை, தரை துடைப்பான்கள் மற்றும் மைக்ரோ ஓவன்களை தேடுவதையும் மக்கள் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love

Leave a Reply