பிரதமரின் நிகழ்ச்சிகளில் சிக்கனம்: மோடி உத்தரவு

புதுடில்லி: பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதை, சிக்கனம் செய்ய, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சுதந்திர தின விழாவையும் சிக்கனமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால், மத்திய அரசு, விழாக்களைக் குறைத்துள்ளது. மிகவும் முக்கியமான அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படும். ‘குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்; கூட்டம் சேர்க்கக் கூடாது’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘இந்த விழாக்களில் அதிக செலவு செய்யக் கூடாது; சிக்கனமாக இருக்க வேண்டும்’ எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட், 15ம் தேதி, இந்திய சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது வழக்கம். மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஏழாவது முறையாக, இந்த ஆண்டு, செங்கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதற்கு முன், இந்த விழாவில், வெளிநாட்டு துாதர்கள், அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் உட்பட, 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 1,200 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என, கூறப்படுகிறது. தவிர, பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதையும் சிக்கனம் செய்ய, மோடி உத்தரவிட்டுள்ளாராம்.

Spread the love

Leave a Reply