நேபாளம் மீண்டும் பார்லியில் மசோதா தாக்கல்

காத்மாண்டு; நம் அண்டை நாடான நேபாளம், தன் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்துள்ளது. சமீபகாலமாக நேபாள அரசு, நம் நாட்டுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது; சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில், எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய சில பகுதிகளை, தங்களுக்கு சொந்தமான பகுதி என கூறி, தன் அதிகாரப்பூர்வ புவியியல் வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளை, செயற்கையாக மாற்ற முடியாது’ என, மத்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரைபடத்தில் மீண்டும் மாற்றம் செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, நேபாள சட்ட அமைச்சர் சிவமாயா தும்பஹாங்பே, நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதில், எந்த மாதிரியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற விபரங்கள் விரைவில் வெளியாகும்.திருத்தம் செய்யப்படும் புதிய வரைபடம், நேபாள அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமாக கருதப்படும்.
இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:நேபாள அரசு நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். அண்டை நாடுகளுடன், பரஸ்பர நட்பை தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை. இதற்கான நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Spread the love

Leave a Reply